TNPSC Thervupettagam

சர்வதேச கிரிக்கெட்டுக்கான குறைந்தபட்ச வயது

November 25 , 2020 1334 days 634 0
  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான குறைந்த பட்ச வயதை அறிவித்துள்ளது.
  • அதன்படி தற்போது, ஒரு வீரர் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியில் இணைய அல்லது 19 வயதுக்குட்பட்டோருக்கான சர்வதேச கிரிக்கெட் அணியில் சேர குறைந்தபட்சம் 15 வயதினைக் கொண்டிருக்க வேண்டும்.
  • பாகிஸ்தானின் ஹசன் ரஸா சர்வதேச கிரிக்கெட்  போட்டியில் விளையாடிய மிகவும் இளம் வயது கிரிக்கெட் வீரர் ஆவார்.
  • சச்சின் டெண்டுல்கர் இந்தியாவிற்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய மிகவும் இளம் வயது இந்தியராவார்.
  • அவர் தனது பதினாறாவது வயதில் கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 1989 ஆம் ஆண்டு நவம்பர் 15 அன்று  அறிமுகமானார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்