TNPSC Thervupettagam

சர்வதேச குத்துச்சண்டை: சிவ தாபா, மனோஜுக்கு தங்கம்

July 31 , 2017 2719 days 1017 0
  • செக் குடியரசில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சிவ தாபா, மனோஜ் குமார் உள்ளிட்ட 5 பேர் தங்கப் பதக்கம் வென்றனர்.
  • ஆடவர் 60 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற சிவ தாபா தனது இறுதிச் சுற்றில் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் ஸ்லோவேக்கியாவின் பிலிப் மெஸ்ஸரோசை தோற்கடித்தார்.
  • 69 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற மனோஜ் குமார் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் செக் குடியரசின் டேவிட்டை தோற்கடித்து தங்கம் வென்றார்.
  • 91 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் சதீஷ் குமார் ஜெர்மனியின் மேக்ஸ் கெல்லரை வீழ்த்தி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
  • 52 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அமித்குமார் பாங்கல் தனது இறுதிச் சுற்றில் சகநாட்டவரான கவிந்தர் பிஸ்ட்டை தோற்கடித்து தங்கம் வென்றார்.
  • கெளரவ் பிதுரி (56 கிலோ) 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் போலந்தின் இவானோவ் ஜெரோஸ்லாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.
  • அதே நேரத்தில் இந்தியாவின் கவிந்தர் பிஸ்ட், மணீஷ் பன்வார் (81 கிலோ எடைப் பிரிவு) ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், சுமித் சங்வான் (91 கிலோ எடைப் பிரிவு) வெண்கலமும் வென்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்