TNPSC Thervupettagam

சர்வதேச குறுங்கோள் தினம் - ஜூன் 30

June 30 , 2022 788 days 288 0
  • 1908 ஆம் ஆண்டு ரஷ்யாவின் சைபீரியாவில், சுமார் 2,150 சதுர கிலோமீட்டர் (830 சதுர மைல்) காடுகளை ஒரு குறுங்கோள் அழித்த துங்குஸ்கா நிகழ்வின் ஆண்டு நிறைவு நாளில் இத்தினமானது அனுசரிக்கப்பட்டது.
  • குறுங்கோள் தினமானது ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களால் இணைந்து நிறுவப்பட்டது.
  • 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது இந்தத் தினத்தினைக் கொண்டாடுவதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
  • விண்வெளி ஆய்வாளர்கள் சங்கத்தினர் முன்வைத்த, விண்வெளியின் அமைதியான பயன்பாடுகளுக்கான குழுவால் (COPUOS) அங்கீகரிக்கப்பட்ட, ஒரு முன்மொழிவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "சிறியது அழகானது" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்