சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணை அடிப்படையிலான கைது
March 17 , 2025 16 days 69 0
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தால் (ICC) தேடப்படும் முன்னாள் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே மணிலாவில் கைது செய்யப்பட்டார்.
அவரது ஆட்சிக் காலத்தில், நாடு முழுவதும் சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டனர் என்ற நிலையில் இதில் 2,041 போதைப் பொருள் கடத்தல்கள் தொடர்பான சந்தேகத்திற்குறிய நபர்கள் காவல் துறை நடவடிக்கைகளில் கொல்லப்பட்டனர்.
அவர் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், தி ஹேக் நகரினைத் தளமாகக் கொண்ட சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் அங்கத்தினர் என்ற ஒரு அந்தஸ்தில் இருந்து பிலிப்பைன்ஸ் விலகுவதாக அறிவித்தார்.
ஆனால் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் விதிகளின் கீழ், ஒரு நாடு முன்னர் ஒரு உறுப்பினராக இருந்து விலகியிருந்தாலும், அது உறுப்பினராக இருந்த ஒரு காலத்தில் அதன் நிர்வாகத்திற்குள் செய்யப்படும் குற்றங்கள் மீதான அதிகார வரம்பை அந்த நீதி மன்றம் தக்க வைத்துக் கொள்கிறது.