சர்வதேச குழந்தைப் பருவ புற்றுநோய் தினம் - பிப்ரவரி 15
February 22 , 2024 277 days 301 0
இந்த நாள் குழந்தைப் பருவ புற்றுநோய் தொடர்பான சவால்களையும், இந்த பயங்கரமான நோயை எதிர்த்துப் போராட குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆதரவளிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்து உரைக்கிறது.
இது 2002 ஆம் ஆண்டில் சர்வதேசக் குழந்தைப் பருவ புற்றுநோய் அமைப்பு என்ற அமைப்பினால் நிறுவப்பட்டது.
ஒவ்வோர் ஆண்டும் உலகெங்கிலும் 4 லட்சம் குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப் படுகின்றனர் ஆனால் அவர்களில் பாதி பேர் மட்டுமே அவர்களுக்கு அந்நோய் பாதிப்பு இருப்பது குறித்து கண்டறியப்படுகிறார்கள்.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் 70% மற்றும் அதிக வருமானம் கொண்ட நாடுகளில் சுமார் 20% குழந்தைகள் இந்தப் பாதிப்பில் இருந்து குணப்படுத்தப் படவில்லை.
ஒவ்வோர் ஆண்டும், 0 முதல் 19 வயதிற்கு இடைப்பட்ட 4,00,000 குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் புற்றுநோயால் பாதிக்கப் படுகின்றனர்.