சர்வதேச குழந்தைப் பருவ புற்றுநோய் தினம் - பிப்ரவரி 15
February 19 , 2025 3 days 46 0
இந்தத் தினமானது குழந்தைப் பருவ புற்றுநோய்கள் குறித்த ஒரு விழிப்புணர்வினைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும், உலகளவில் சுமார் 400,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் 20 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தியாவில், சுமார் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புக்கு 9வது பொதுவான காரணம் புற்றுநோய் ஆகும்.
ICMR-NCDIR நிறுவனத்தின் தேசியப் புற்றுநோய் பதிவு திட்டத்தில் பதிவான அனைத்துப் புற்றுநோய்களிலும் 4% ஆனது குழந்தைப் பருவ புற்றுநோய்கள் (0-14 வயது) ஆகும்.