TNPSC Thervupettagam

சர்வதேச கைப்பாவை திருவிழா – கொல்கத்தா

October 15 , 2017 2658 days 974 0
  • கொல்கத்தா நகரம் சர்வதேச கைப்பாவை திருவிழாவை அரங்கேற்றவுள்ளது. இத்திருவிழா அக்டோபர் 26 ஆம் தேதி துவங்கவுள்ளது.
  • இலண்டன் , பெரூ , போர்ச்சுகல் , இத்தாலி , இலித்துவேனியா, பிரேசில் , சிங்கப்பூர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த கைப்பாவை கலைஞர்கள் இத்திருவிழாவில் பங்குபெற உள்ளனர்.
  • கொல்கத்தா இத்தகைய திருவிழாவை முதல் முறையாக நடத்துகிறது. ஆறு நாட்கள் நடக்கவிருக்கும் இந்தத் திருவிழா அக்டோபர் மாதம் 31 அன்று நிறைவுபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • கைப்பாவை கலையில் இணைந்துள்ள உணர்ச்சிகளை மீட்டுருவாக்கம் செய்வதே இந்த கைப்பாவை திருவிழாவின் நோக்கமாகும். இத்திருவிழா கொல்கத்தா நகரின் மொஹோர்கஞ் என்ற இடத்தில் நடைபெறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்