சர்வதேச கைம்பெண்கள் தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 23 அன்று நிகழக்கூடிய ஒரு சர்வதேச விழிப்புணர்வு தினமாகும்.
இத்தினம் 2010 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளால் தொடங்கப்பட்டது.
இத்தினமானது பல நாடுகளில், அவர்களது கணவர்களின் இறப்புக்குப் பின்னர் கைம்பெண்கள் எதிர்கொள்ளும் மனித உரிமை மீறல்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தினம் கைம்பெண்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கு ஒரு சிறந்த ஆதரவு அமைப்பை ஏற்படுத்துவதற்கான தேவையைக் குறிக்கின்றது.