TNPSC Thervupettagam

சர்வதேச கோல்கீப்பர்கள் விருதுகள்

October 3 , 2018 2148 days 590 0
  • தான் பிறந்தபோது இருந்த உலகத்தை விட தற்பொழுது மிகச்சிறந்த உலகத்தை அமைத்ததற்காக 3 இளம் வயதுடையவர்களுக்கு சர்வதேச கோல்கீப்பர்கள் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 18 வயதுடைய அமிகா ஜார்ஜ் என்ற இளம்பெண் “வறுமையின் காலம்” தொடர்பான பிரச்சாரத்திற்காக “பிரச்சார விருதை” வென்றுள்ளார்.
  • ஈராக் நாட்டைச் சேர்ந்த 24 வயதுடைய நடியா முரட் என்ற பெண் “மாற்றத்தை உருவாக்குபவருக்கான” விருதை வென்றுள்ளார். மேலும் நோபல் அமைதிப் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலிலும் இவர் இடம் பெற்றுள்ளார்.
  • மனிதக் கடத்தலில் இருந்து மீண்டு வாழ்பவர்களின் கண்ணியத்திற்கான ஐ.நா. நல்லிணக்கத் தூதுவராக நடியா செயல்படுகிறார்.
  • கென்யாவைச் சேர்ந்த 28 வயதுடைய டயஸ்முஸ் கிசிலு என்ற இளைஞர் “முன்னேற்றத்திற்கான” விருதை வென்றுள்ளார்.
  • ஐ.நா.வின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் மீதான சர்வதேச நடவடிக்கைகள் மற்றும் அடைந்துள்ள முன்னேற்றத்தை கண்காணித்து உந்தப்படுத்துவதற்காக பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் பவுண்டேஷனால் 2017 ஆம் ஆண்டில் “கோல்கீப்பர்கள்” தொடங்கப்பட்டது.
  • கோல் கீப்பர்களுக்கான சர்வதேச கோல் விருதுகள் பொதுவாக “சமூக முன்னேற்றத்திற்கான ஆஸ்கார்” என்று அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்