ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 ஆம் தேதி சர்வதேச சாதனையாளர்கள் தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
ஏதாவது ஒரு துறையில் தலைசிறந்த சாதனைகளை நிகழ்த்திய சாதனையாளர்களை கௌரவிப்பதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகின்றது.
அறிவியல் விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், சமூகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் தங்கள் துறைகளில் சாதனையாளர்களாக இருக்கலாம்.
இவர்கள் வயது, பாலினம், கல்வி, நிறம், சாதி ஆகிய எந்தப் பாகுபாடும் இல்லாமல் விடாமுயற்சியுடன் தங்களது இலக்குகளை அடைந்த மனிதர்களாவர்.