TNPSC Thervupettagam

சர்வதேச சிறார் பாலியல் சுரண்டல் தொடர்பான முன்னெடுப்பு

July 13 , 2022 741 days 366 0
  • சர்வதேசக் காவல்துறையின் சர்வதேச சிறார் பாலியல் சுரண்டல் (ICSE) தொடர்பான முன்னெடுப்பில் இந்தியாவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவு இணைந்துள்ளது.
  • இதன் மூலம், அதன் படங்கள் மற்றும் ஒளிப்படக் காட்சிகள் ஆகியவற்றின் தரவுத் தளத்திற்கான அணுகலைப் இது பெற்றது.
  • சர்வதேச சிறார் பாலியல் சுரண்டல் தொடர்பான முன்னெடுப்பின் படம் மற்றும் ஒளிப் படக் காட்சிகள் தரவுத்தளம் ஆனது ஒரு நுண்ணறிவு மற்றும் புலனாய்வுக் கருவி ஆகும்.
  • இது சிறப்புப் புலனாய்வாளர்களை சிறார் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் பற்றிய தரவைப் பகிர்ந்து கொள்ள வழிவகை செய்கிறது.
  • இது சிறார் பாலியல் சுரண்டல் ஆதாரங்களைப் பகுப்பாய்வு செய்வதோடு, பாதிக்கப் பட்டவர்கள், துஷ்பிரயோகம் செய்பவர்கள் மற்றும் நடந்த இடம் ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்புகளை ஏற்படுத்துகிறது.
  • இந்த தரவுத்தளத்தையும் மென்பொருளையும் அணுகுவதற்கு வாய்ப்பு பெற்ற 68வது நாடு இந்தியாவாகும்.
  • சர்வதேச சிறார் பாலியல் சுரண்டல் தொடர்பான முன்னெடுப்பின் தரவுத்தளம் ஆனது உலகளவில் சராசரியாக தினமும் 7 பாதிக்கப்பட்ட குழந்தைகளை அடையாளம் காண உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்