TNPSC Thervupettagam

சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023

January 4 , 2023 565 days 1363 0
  • ஐக்கிய நாடுகள் சபையானது 2023 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக (IYM) அறிவித்துள்ளது.
  • சர்வதேச சிறுதானிய ஆண்டு என்பது இந்த "ஊட்டச்சத்து மிக்க தானியங்களின்" பயன்பாட்டினை ஊக்குவிப்பதற்காக இந்திய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட திட்டமாகும்.
  • இது சர்வதேச சிறுதானிய ஆண்டினை (2023) ஒரு ‘மக்கள் இயக்கமாக’ மாற்றுவதுடன் இந்திய நாட்டினை ‘சிறுதானிய உற்பத்திக்கான உலகளாவிய மையமாக’ நிலை நிறுத்துவதற்கான ஒரு முயற்சியாகும்.
  • 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், சிறுதானிய வகைகள் "ஊட்டச்சத்து மிக்க தானியங்கள்" என மறுபெயரிடப் பட்டன.
  • 2018 ஆம் ஆண்டானது தேசிய சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டது.
  • உலகின் சிறுதானிய உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கினை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
  • இந்தியாவில் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சிறுதானியம் அதிகளவில் உற்பத்தி செய்யப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்