2019 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கக் கோரி ஐ,நா சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கு (Food & Agricultural Organization) இந்தியா முன்மொழிந்து வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் இத்தாலியின் ரோம் நகரில் 2018 அக்டோபரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள விவசாயக் குழுவின் (committee on Agriculture - COAG) 26வது அமர்வின் நிகழ்ச்சி நிரலில் இந்த முன்மொழிதலைச் சேர்க்க இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த முன்மொழிதலை உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO – Food and Agriculture Organization) அதன் உறுப்பு நாடுகளோடு ஏற்றுக் கொள்வதன் மூலம் ஐ.நா பொதுச் சபை ஆனது 2019ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்க வழிவகை செய்யும்.
இந்தியா 2018ம் ஆண்டை தேசிய சிறுதானிய ஆண்டாக கொண்டாடுகிறது. சிறுதானிய ஆண்டாக அனுசரிப்பதன் மூலம் சிறுதானிய உற்பத்தி மற்றும் கொள்முதலை ஊக்குவிக்க இது உதவுகிறது.