இந்தத் தினமானது, சிறுத்தைகளின் முக்கியத்துவம் குறித்த ஒரு விழிப்புணர்வினை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சிறுத்தைகள் என்பது தென்படுவதற்கு அரிதான மற்றும் இரவு நேர விலங்குகள் என்ற நிலையில், அவற்றின் அளவு மற்றும் நிறம் அதன் வாழ்விடத்தைப் பொறுத்ததாகும்.
சிறுத்தைகள் ஆசியா, ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதிகள், தெற்கு ரஷ்யா மற்றும் இந்தியத் துணைக் கண்டம் ஆகிய பகுதிகளில் வாழ்கின்றன.
இவை IUCN பட்டியலில் அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த இனமாகப் பட்டியலிடப் பட்டுள்ளன.
உலகளவில் சிறுத்தைகளின் எண்ணிக்கையினை அதிகரிக்கச் செய்யவும் அவற்றினை பெருமளவில் கொண்டாடுவதற்காகவும் கேப் சிறுத்தை அறக்கட்டளை (CLT) ஆனது, அதற்காக பிரத்தியேகமாக செயல்படுகின்ற ஓர் இணைய தளத்தினை அறிமுகப் படுத்தியுள்ளது.