TNPSC Thervupettagam

சர்வதேச சிவப்புப் பாண்டா தினம் - செப்டம்பர் 21

September 23 , 2019 1833 days 516 0
  • உலகில் சிவப்புப் பாண்டா இனங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினம் கொண்டாடப்படுகின்றது.
  • சிவப்புப் பாண்டா ஆனது கிழக்கு இமயமலை மற்றும் தென்மேற்கு சீனா ஆகியவற்றில் வாழும் ஒரு பாலூட்டியாகும்.
  • துருப் பிடித்த நிறத்திலான இந்த உயிரினங்கள் கூடு கட்டும் மரங்கள் மற்றும் மூங்கில் ஆகியவற்றின் இழப்பைச் சந்தித்து வருகின்றன. இது அந்த இனத்தின் வீழ்ச்சிக்கு வழி வகுக்கின்றது.
  • இந்த விலங்குகள் பெரும்பாலும் மரங்களிலேயே தங்கள் வாழ்வினைக் கழித்தும் உயரமான இடங்களில் தூங்கியும் நேரத்தைக் கழிக்கின்றன.
  • இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (International Union for Conservation of Nature - IUCN) சிவப்புப் பட்டியலில் “அருகி வரும் இனமாகப்” பட்டியலிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்