TNPSC Thervupettagam

சர்வதேச சிவிங்கிப் புலிகள் தினம் 2023 – டிசம்பர் 04

December 6 , 2023 356 days 155 0
  • சிவிங்கிப் புலிகள் ஆனது, பூமியின் வேகமான நிலவாழ் விலங்குகள் மற்றும் பாலூட்டி இனம் எனப் புகழப்படுகிறது.
  • வனங்களில் 7,000 சிவிங்கிப் புலிகள் மட்டுமே எஞ்சியுள்ளதையடுத்து சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) ஆனது, சிவிங்கிப் புலிகளை பாதிக்கப்படக் கூடிய இனமாக வகைப்படுத்துகிறது.
  • இந்த தேதியானது, அமெரிக்காவின் டாக்டர் லாரி மார்க்கரால் வளர்க்கப்பட்ட கயாம் என்ற சிவிங்கிப் புலியின் பிறந்தநாளாகும்.
  • கயாம் என்பது அமெரிக்காவின் ஓரிகான் என்ற மாகாணத்தில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் மார்க்கரால் வளர்க்கப்பட்ட ஒரு சிவிங்கிப் புலிக் குட்டியாகும்.
  • 1990 ஆம் ஆண்டில் சிவிங்கிப் புலிகள் பாதுகாப்பு நிதியம் (CCF) நிறுவப்பட்டதன் மூலம் சிவிங்கிப் புலிகளைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாடு சிறப்பிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்