TNPSC Thervupettagam

சர்வதேச சுகாதார விதிமுறைகள்

June 10 , 2024 21 days 81 0
  • 194 உறுப்பினர் நாடுகளின் ஒரு வருடாந்திரக் கூட்டமான 77வது உலக சுகாதாரச் சபையானது, சர்வதேச சுகாதார விதிமுறைகளில் (2005) (IHR) மேற்கொள்ளப்பட்ட முக்கியமான திருத்தங்களின் தொகுப்பை ஏற்றுக் கொண்டது.
  • எதிர்காலப் பெருந்தொற்றுகள் மற்றும் தொற்றுநோய்களின் அபாயத்திலிருந்து அனைத்து மக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் பாதுகாப்பதற்காக அனைத்து நாடுகளிலும் இது விரிவான, வலுவான அமைப்புகள் இருப்பதை உறுதி செய்வதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
    • IHR விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட புதிய திருத்தங்களில் பின்வருவன அடங்கும்:
    • பெருந்தொற்று அவசரநிலைக்கு ஒரு வரையறையை அறிமுகப்படுத்துதல்,
    • மருத்துவப் பொருட்கள் மற்றும் நிதியுதவிக்கான அணுகலை வலுப்படுத்துவதில் ஒற்றுமை மற்றும் சமத்துவத்திற்கான உறுதிப்பாடு,
    • திருத்தப்பட்ட ஒழுங்குமுறைகளைத் திறம்பட செயல்படுத்துவதற்கு ஏதுவாக அரசுகளின் குழுவை அமைத்தல்,
    • தேசிய IHR அதிகாரிகளை உருவாக்குதல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்