இந்த தேதியானது, உலக சுங்க அமைப்பு (WCO) நிறுவப்பட்டதை நினைவு கூருகிறது.
சுமூகமான எல்லை கடந்த வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் சுங்கத்தின் முக்கியத்துவத்தை இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது.
உலக சுங்க அமைப்பு ஆனது முன்னதாக 1952 ஆம் ஆண்டில் சுங்க கூட்டுறவு சபை என அறியப்பட்டது.
உலக சுங்க அமைப்பின் முதல் அமர்வானது, 17 உறுப்பினர் நாடுகளின் பங்கேற்புடன் 1953 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதியன்று நடைபெற்றது.
தற்போது உலக வர்த்தகத்தில் சுமார் 98% பங்கினைக் கொண்டிருக்கும் 183 உறுப்பினர் நாடுகளை கொண்டுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'சுங்கம் ஆனது பாரம்பரிய மற்றும் புதியப் பங்குதாரர்களை ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் ஈடுபடுத்துகிறது' என்பது ஆகும்.