சமூகம், பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தேவைகள் குறித்த செயல்களின் மையமாக இருக்கும் ஒரு நிலையான எதிர்காலத்தை நோக்கிய சுங்கத்தின் பங்களிப்புகளுக்காக இந்த தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
இந்நாளுக்கான கருப்பொருள் - “மக்கள், வளர்ச்சி மற்றும் கிரகத்திற்கான நிலைத் தன்மையை வளர்ப்பதற்கான சுங்கம்” என்பதாகும்.
இந்தத் தினமானது 1953 ஆம் ஆண்டில் சுங்க ஒத்துழைப்பு மன்றத்தின் (Customs Cooperation Council - CCC) தொடக்க அமர்வு பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற நாளை நினைவு கூர்கின்றது.
1994 ஆம் ஆண்டில் CCC ஆனது உலக சுங்க அமைப்பு (World Customs Organization - WCO) என மறுபெயரிடப் பட்டது. தற்போது 179 நாடுகளைச் சேர்ந்த சுங்க நிறுவனங்கள் WCO அமைப்பின் உறுப்பினர்களாக உள்ளன.
சுங்க விஷயங்களை மட்டுமே முன்னிலைப்படுத்தக் கூடிய நாடுகளுக்கிடையேயான ஒரே அமைப்பு என்று இந்த உலக சுங்க அமைப்பு அழைக்கப் படுகின்றது.
WCO ஆனது சர்வதேச ஒத்திசைவு அமைப்பு முறையிலானப் பொருட்களின் பெயரிடல் மற்றும் சுங்க மதிப்பீடு & அவற்றின் தோற்றம் தொடர்பான விதிகள் குறித்த உலக வர்த்தக அமைப்பு (WTO) ஒப்பந்தங்களின் தொழில்நுட்ப அம்சங்களையும் நிர்வகிக்கின்றது.