TNPSC Thervupettagam

சர்வதேச சுற்றுலா விருது 2023

September 11 , 2022 681 days 373 0
  • பசிபிக் பகுதி சுற்றுலா எழுத்தாளர் சங்கத்தினால் வழங்கப்படும் (PATWA) 2023 ஆம் ஆண்டிற்கான கலாச்சாரம் சார்ந்த சிறந்த சுற்றுலாத் தளத்திற்கான சர்வதேசப் பயண விருதினை மேற்கு வங்காளம் பெற உள்ளது.
  • இது ஐக்கிய நாடுகள் சபையின் உலகச் சுற்றுலா அமைப்பின் (UNWTO) ஒரு துணை உறுப்பினர் அமைப்பாகும்.
  • 2023 ஆம் ஆண்டு மார்ச் 09 ஆம் தேதியன்று ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற உள்ள உலகச் சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்துத் தலைவர்களின் உச்சி மாநாட்டில் இந்த விருதானது வழங்கப்படும்.
  • தொடர்ந்து இரண்டாவது முறையாக, உலகப் பயண விருதுகளில், 2022 ஆம் ஆண்டின் கரீபியன் பகுதியின் முன்னணிக் கலாச்சாரச் சுற்றுலாத் தளமாக கியூபா குடியரசுத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்