சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணியின் (International Solar Alliance - ISA) முதல் மாநாட்டை மார்ச் 11 அன்று புது தில்லியில் இந்தியா நடத்த உள்ளது.
மாநாட்டின்போது சூரியசக்தி பயன்பாடு தொடர்பாக 121 திட்டங்கள் இரு கட்டங்களாக தொடங்கப்பட உள்ளன.
மார்ச் 11 அன்று 50 திட்டங்களும் ஏப்ரல் 20 அன்று 11 திட்டங்களும் தொடங்கப்பட உள்ளன.
மேலும் மாநாட்டின் போது சோலார் மேற்கூரை பயன்பாடு (Solar Rooftop) மற்றும் சோலார் மின்- இயக்கம் மற்றும் சேகரிப்பு (Solar E-Mobility and Storage) போன்றவற்றைப் பெருக்குவது தொடர்பாக இரு புதிய திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன.
ISA
2015 நவம்பரில் பாரிஸில் நடைபெற்ற COP21 பருவநிலை மாநாட்டில் பிரஞ்சு அதிபருடன் இணைந்து இந்தியாவால் இக்கூட்டணி ஏற்படுத்தப்பட்டது.
சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணி ஆனது 121 நாடுகளின் கூட்டணி ஆகும். இக்கூட்டணியிலுள்ள நாடுகள் சூரிய ஆற்றல் வளம் நிறைந்தவை. இவை கடக ரேகை மற்றும் அட்சரேகை ஆகியவற்றினுக்கிடையே முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அமைந்தவை.
புதை படிமங்கள் அடிப்படையிலான எரிபொருள்கள் மீதான சார்பை குறைத்து, திறன்மிகு வகையில் சூரிய ஆற்றலை பயன்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
இடைக்கால செயலகத்தோடு சேர்த்து இதன் தலைமையகம் இந்தியாவின் குர்கானில் உள்ளது.
குறைந்தபட்சம் 15 நாடுகள் இதனை ஏற்றுக் கொண்டால் தான் இது செயல்முறைக்கு வரும்.
மேலும், இக்கூட்டணியில் 2030-ல் சூரிய ஆற்றல் திட்டங்களுக்கு நிதி அளிக்க 1 டிரில்லியன் நிதியை திரட்டவும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ISA ஆனது அவை, கவுன்சில் மற்றும் செயலகம் என மூன்று நிறுவனக் கட்டமைப்பை கொண்டுள்ளது.