TNPSC Thervupettagam

சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணி- இந்தியா

March 31 , 2018 2434 days 775 0
  • சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணி (International Solar Alliance-ISA) மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry of External Affairs-MEA)   ஒரு ஒருங்கிணைப்பாளர்   ஒப்பந்தத்தில் (Host Country Agreement) புதுதில்லியில் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்த ஒப்பந்தமானது சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணிக்கு சட்ட ஆளுமைத்துவத்தை (juridical personality) வழங்கும். மேலும் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கும், அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்குவதற்கும், அவற்றை அப்புறப்படுத்துவதற்கும், சட்ட நடவடிக்கைகளை (legal proceedings) தொடங்குவதற்கும், தன்நிலை வாதிடுவதற்கும்  சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணிக்கு  சக்தியினை வழங்கும்.
  • சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணியின் கட்டமைப்பு ஒப்பந்தத்தின் பத்தாவது கூற்றின்படி ISA தனது அந்தஸ்து நிலை (status), முன்னுரிமைச் சலுகைகள் (privileges) மற்றும் சட்ட விலக்களிப்புகளை (immunities) பெறலாம்.
 

ISA

  • 2015 நவம்பரில் பாரிஸில் நடைபெற்ற COP21 பருவநிலை மாநாட்டில் பிரெஞ்ச் அதிபருடன் இணைந்து இந்தியாவால் இக்கூட்டணி ஏற்படுத்தப்பட்டது.
  • சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணி ஆனது 121 நாடுகளின் கூட்டணி ஆகும். இக்கூட்டணியிலுள்ள பெரும்பான்மையான நாடுகள் சூரிய ஆற்றல் வளம் நிறைந்தவை. இவை கடகரேகை மற்றும் மகரரேகை ஆகியவற்றினுக்கிடையே முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அமைந்தவை.
  • புதைபடிமங்கள் அடிப்படையிலான எரிபொருள்கள் மீதான சார்பை குறைத்து, திறன்மிகு வகையில் சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவதற்கு கூட்டிணைந்து செயல்படுவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
  • இடைக்காலச் செயலகத்தோடு இணைந்து இதன் தலைமையகம் இந்தியாவின் குர்கானில் உள்ளது.
  • குறைந்தபட்சம் 15 நாடுகள் இதனை ஏற்றுக் கொண்டால் தான் இது செயல்முறைக்கு வரும்.
  • மேலும், இக்கூட்டணியில் 2030-ல் சூரிய ஆற்றல் திட்டங்களுக்கு நிதி அளிக்க 1 டிரில்லியன் நிதியை திரட்டவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • ISA ஆனது அவை, மன்றம் மற்றும் செயலகம் என மூன்று நிறுவனக் கட்டமைப்பை கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்