சர்வதேச சூரிய சக்திக் கூட்டமைப்பின் (International Solar Alliance - ISA) முதல் மாநாட்டை புதுதில்லியில் இந்தியா நடத்தியுள்ளது.
“டெல்லி சூரியசக்தி நிரல்கள்” (Delhi Solar Agenda) எனும் மூன்று பக்க அறிக்கை ஒன்றும் இம்மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை மூலம் 2030 ஆம் ஆண்டின் நீடித்த வளர்ச்சிக்கான ஐ.நாவினுடைய நிரல்களின் அடைவிற்கு சர்வதேச சூரிய சக்திக் கூட்டமைப்பு தன்னுடைய பொறுப்பை வலியுறுத்தியுள்ளது.
உலகளாவியப் பிரச்சனையான பருவநிலை மாற்றத்தைக் கையாள தத்தமது தேசிய ஆற்றல் கலவையின் (National Energy Mix) இறுதியான ஆற்றல் நுகர்வில் சூரிய மின்னாற்றலின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் உறுப்பு நாடுகள் செயல்படும் எனவும் இந்நிரலில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இம்மாநாட்டில் இந்தியா 15 நாடுகளில் 27 சூரிய மின்சக்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கு 4 மில்லியன் டாலர் நிதியுதவியை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் இந்நிரலில் தொலைதூர இடங்களில் அமைந்துள்ள, வசதியற்ற ஏழ்மையான சமுதாயங்களின் ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உறுப்பு நாடுகள் மின் இணைவுக் கட்டமைப்பு இல்லாத சூரியசக்தியின் பயன்பாடுகளை (off-grid solar applications) தங்கள் கருத்தில் கொள்ளும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ISA
2015 நவம்பரில் பாரிஸில் நடைபெற்ற COP21 ஐ.நா பருவநிலை மாநாட்டில் பிரெஞ்ச் அதிபருடன் இணைந்து இந்தியாவால் இக்கூட்டணி ஏற்படுத்தப்பட்டது.
சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணி ஆனது 121 நாடுகளின் கூட்டணி ஆகும். பெரும்பான்மையான இந்நாடுகள் சூரிய ஆற்றல் வளம் நிறைந்தவை. இவை கடக ரேகை மற்றும் மகரரேகை ஆகியவற்றினுக்கிடையே முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அமைந்தவை.
புதை படிமங்கள் அடிப்படையிலான எரிபொருள்கள் மீதான சார்பைக் குறைத்து, திறன்மிகு வகையில் சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவதற்கு கூட்டிணைந்து செயல்படுவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
இடைக்கால செயலகத்தோடு இணைந்து இதன் தலைமையகம் இந்தியாவின் குர்கானில் உள்ளது.
குறைந்தபட்சம் 15 நாடுகள் இதனை ஏற்றுக் கொண்டால் தான் இது செயல்முறைக்கு வரும்.
மேலும், இக்கூட்டணியில் 2030-ல் சூரிய ஆற்றல் திட்டங்களுக்கு நிதி அளிக்க 1 டிரில்லியன் டாலர் நிதியை திரட்டவும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ISA ஆனது அவை, கவுன்சில் மற்றும் செயலகம் என மூன்று நிறுவனக் கட்டமைப்பை கொண்டுள்ளது.