இந்தியாவானது 3வது சர்வதேச சூரியகாந்தி விதை மற்றும் எண்ணெய் மாநாட்டை வரும் ஜூலை 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மும்பையில் நடத்தவிருக்கின்றது.
முதல் 2 மாநாடுகளானது முறையே சீனா மற்றும் உக்ரைனில் நடத்தப் பட்டது.
சூரியகாந்தி எண்ணெயை மிக அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடு இந்தியா ஆகும்.
சர்வதேச சூரியகாந்தி எண்ணெய் கூட்டிணைவானது சீனா, உக்ரைன், ரஷ்யா, ஹங்கேரி, ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளின் தேசிய கூட்டிணைவுகள் மற்றும் நிறுவனங்களால் 2015 ஆம் ஆண்டில் ரோம் நகரில் உருவாக்கப்பட்டது.