TNPSC Thervupettagam

சர்வதேச சூரியசக்திக் கூட்டணியில் காங்கோ

February 9 , 2023 529 days 271 0
  • சர்வதேச சூரியசக்திக் கூட்டணியில் காங்கோ இணைவதை இந்தியா வரவேற்று உள்ளது.
  • சர்வதேச சூரியசக்திக் கூட்டணி (ISA) என்பது சூரிய ஆற்றல் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டினை அதிகப்படுத்தச் செய்வதற்கான செயல் சார்ந்த, உறுப்பினர்களால் இயக்கப் படும் ஒரு கூட்டுறவு அமைப்பாகும்.
  • இதன் தலைமையகம் இந்தியாவில் உள்ள நிலையில் அதன் இடைக்காலச் செயலகம் குருகிராமில் அமைக்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச சூரியசக்திக் கூட்டணியின் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் மொத்தம் 107 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்த 107 நாடுகளில், 86 நாடுகள் சர்வதேச சூரியசக்திக் கூட்டணியின் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்துள்ளன.
  • ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து உறுப்பினர் நாடுகளும் சர்வதேச சூரியசக்திக் கூட்டணியில் இணையத் தகுதியுடையவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்