TNPSC Thervupettagam

சர்வதேச செல்வ அறிக்கை 2019

October 28 , 2019 1762 days 579 0
  • சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்ட பன்னாட்டு முதலீட்டு வங்கியான கிரெடிட் சூயிஸ் குழுமம் தனது வருடாந்திர உலகளாவிய செல்வ அறிக்கையின் 10வது பதிப்பை வெளியிட்டுள்ளது.
  • ஒரு நபரின் "நிகர மதிப்பு" என்ற அடிப்படையில் செல்வம் வரையறுக்கப் படுகிறது.
  • நிகர மதிப்பு என்பது ஒரு நபரின் கடன்களைக் கழித்து அவரின் நிதிச்  சொத்துக்கள் மற்றும் உண்மையான சொத்துக்களின் மதிப்பைச் சேர்ப்பதன் மூலம் பெறப் படுகிறது.
முக்கியப் புள்ளி விவரங்கள்
  • இந்த ஆண்டு அமெரிக்காவை முந்திக் கொண்டு சீனா “உலக செல்வ விநியோகத்தில் முதல் 10% இடங்களில் அதிகமான மக்களைக் கொண்ட நாடு” என மாறியுள்ளது.
  • உலகின் செல்வத்தில் பாதியான  44% அளவினை (158.3 டிரில்லியன் டாலர் மதிப்பு) 47 மில்லியன் மக்கள் மட்டுமே வைத்திருக்கிறார்கள்.
  • சதவீதத்தைப் பொறுத்தவரை 0.9% மக்கள் உலகின் செல்வத்தில் 44% அளவினை வைத்திருக்கிறார்கள்.
  • உலக செல்வத்தில் 82% அளவினை 10% அளவிலான பணக்காரர்கள் கொண்டுள்ளனர்.
  • 2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மொத்த உலகளாவிய செல்வத்தில் 1% அளவிற்கும் குறைவாகவே செல்வந்தர் வரிசையில் இருக்கும் கடைசி பாதி அடுக்கு மக்கள் கொண்டு இருக்கின்றனர்.

இந்தியாவைப் பற்றிய தரவு

  • அதிஉயர் நிகர சொத்து மதிப்புள்ள தனிநபர்களின் எண்ணிக்கையில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
  • இந்தியாவில் மொத்த செல்வம் 2000 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் நான்கு மடங்கு அதிகரித்து, 2019 ஆம் ஆண்டில் 12.6 டிரில்லியன் டாலர் என்ற மதிப்பினை எட்டியது.
  • இந்தியாவில் வயதில் பெரியவர்கள் 4,460 என்ற அளவில் 50 மில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துக்களையும், 1,790 என்ற அளவில் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துக்களையும் கொண்டுள்ளனர்.
  • உலக செல்வந்தர்களில் முதல் 1% பேரில் இந்தியாவில் 8.27 லட்சம் என்ற அளவில்  வயதில் பெரியவர்கள் உள்ளனர்.
  • அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா தனது செல்வத்தை மிக வேகமாக அதிகரித்து 4.4 டிரில்லியன் டாலர்களைச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்