ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 அன்று சர்வதேச செஸ் (சதுரங்கம்) தினம் அனுசரிக்கப்படுகின்றது. 1924 ஆம் ஆண்டு இத்தினத்தில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE - International Chess Federation) உருவாக்கப்பட்டது.
FIDE தொடங்கப்பட்டதைக் கௌரவிப்பதற்காக 1966 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி முதல் சர்வதேச செஸ் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
ஜூலை 20 ஆம் தேதியை சர்வதேச செஸ் தினமாக அனுசரிப்பதற்கான பரிந்துரையானது யுனெஸ்கோவினால் வழங்கப்பட்டது.
1851 ஆம் ஆண்டில் இலண்டனில் முதலாவது நவீன செஸ் தொடர் நடைபெற்றது.
இத்தொடரில் ஜெர்மனைச் சேர்ந்த அடோல்ப் ஆண்டர்சன் வெற்றி பெற்றார்.
1951 ஆம் ஆண்டில் ஆலன் தூரிங் என்பவர் செஸ் விளையாடுவதற்காக முதலாவது கணினி நிரலை மேம்படுத்தினார்.
இந்தியாவில் செஸ் விளையாட்டு 5-வது நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தக் காலகட்டத்தில் இது “சதுரங்கா” எனப் பெயரிடப்பட்டது.
இதன்பின் இந்த விளையாட்டு பாரசீகத்திற்குப் பரவியது.