ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 30 அன்று சர்வதேச ஜாஸ் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
இத்தினமானது ஜாஸ் குறித்தும் உலகெங்கிலும் உள்ள மக்களை ஒன்றிணைப்பதில் அதன் முக்கியப் பங்கு குறித்தும் எடுத்துரைப்பதற்கு முயற்சிக்கின்றது.
2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது தனது அதிகாரப்பூர்வ நாட்காட்டியில் சர்வதேச ஜாஸ் தினத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.
யுனெஸ்கோ அமைப்பானது ஜாஸ் தினக் கொண்டாட்டத்தை 2005 ஆம் ஆண்டின் “கலாச்சார வெளிப்பாட்டு பன்முகத் தன்மையின் பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பு” மீதான ஒப்பந்தத்துடன் (Convention on the Protection and Promotion of the Diversity of Cultural Expressions) தொடர்புபடுத்துகின்றது.