இந்தத் தினமானது, பரவலாக அறியப்பட்ட இயற்கை ஆர்வலர் சார்லஸ் டார்வின் அவர்களின் பிறந்தநாளில் அவரை கௌரவிக்கும் விதமாக அனுசரிக்கப்படுகிறது.
டார்வின் இயற்கைத் தேர்வின் மூலமான பரிணாமம் குறித்த தனது கருத்தினை, "The Origin of Species by Means of Natural Selection - இயற்கை தேர்வின் மூலம் உயிரினங்களின் தோற்றம்" என்ற புத்தகத்தில் வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து 1858 மற்றும் 1859 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் அவர் எழுதிய பிற கட்டுரைகளின் தொடர் வெளிவந்தது.
அவர் பரிணாமக் கோட்பாட்டின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.