2025 ஆம் ஆண்டு ஆனது, சர்வதேச தாய்மொழி தினத்தின் 25வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
இது 1999 ஆம் ஆண்டு யுனெஸ்கோ பொது மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டு 2000 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இந்த மைல்கல் ஆனது, மொழியியல் பன்முகத் தன்மையைப் பாதுகாப்பதற்கும் தாய் மொழிகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும் கால் நூற்றாண்டு காலமாக மிகுந்த அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை எடுத்துக் காட்டுகிறது.
உலகளவில் சுமார் 7,000 மொழிகள் பேசப்படுகின்றன ஆனால் அவற்றுள் சுமார் 351 மொழிகள் மட்டுமே கல்வியில் பயன்படுத்தப்படுகின்றன.