TNPSC Thervupettagam

சர்வதேச திமிங்கல சுறா தினம் – ஆகஸ்ட் 30

August 31 , 2023 454 days 195 0
  • இந்தத் தினமானது, உலகின் மிகப்பெரிய மீனாக விளங்கும் திமிங்கலச் சுறாக்களின் அவல நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
  • திமிங்கலச் சுறா (ரின்கொடன் டைபஸ்) பூமியில் உள்ள மிகப்பெரிய மீன் மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒரு முக்கிய இனமாகும்.
  • இது தோராயமாக 18 மீட்டர் நீளம் கொண்டதோடு, 21 டன் எடை வரை வளரக் கூடியது.
  • அவை உடலுக்குள்ளே கரு முட்டைகள் உருவாகி குஞ்சு பொரிக்கும் வகை இனமாகும்.
  • இது சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) செந்நிறப் பட்டியலில் அருகி வரும் நிலையில் உள்ள உயிரினமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்