TNPSC Thervupettagam

சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் – மே 4

May 11 , 2018 2389 days 1444 0
  • சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 4-ஆம் தேதி, அனைத்து தீயணைப்பு வீரர்களுக்கும் அவர்களது தன்னலமற்ற சேவைக்கும், அசாதாரண பங்களிப்புக்கும், விதிவிலக்கான தைரியத்திற்கும் பாராட்டு தெரிவிக்கும் விதமாக அனுசரிக்கப்படுகின்றது.

  • இத்தினம் 1999-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 4-ஆம் தேதி, 5 தீயணைப்பு வீரர்கள் ஆஸ்திரேலியாவின் புதர்ச் செடியின் தீயில் மாட்டிக் கொண்டு இறந்த சோக நிகழ்வுகள் காரணமாக உலகம் முழுவதும் கடிதம் அனுப்பப்பட்டு கோரிக்கை விடுத்ததன் விளைவாக ஏற்படுத்தப்பட்டது.
  • இத்தினத்தின் நாடாக்களில், தீயணைப்பு வீரர்களின் பணிகளோடு சம்பந்தப்பட்ட முக்கியக் கூறுகளை அடையாளப்படுத்தும் விதமாக நெருப்பிற்கான வண்ணமாக சிவப்பும் தண்ணீருக்கான வண்ணமாக ஊதாவும் இணைக்கப்பட்டுள்ளன.
  • இந்த வண்ணங்கள் அவசர சேவைகளை பிரதிநிதித்துவப்படுத்துவதாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்