தங்கள் சமூகத்தைப் பாதுகாப்பதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் தீயணைப்பு வீரர்களைக் கௌரவிப்பதே இத்தினத்தின் நோக்கமாகும்.
தங்களின் உயிரை ஆபத்தில் ஆழ்த்தி மற்றொரு உயிரைக் காப்பாற்றும் தீயணைப்பு வீரர்களின் தியாகங்களை அங்கீகரித்துப் பாராட்டும் நாளாக இது அனுசரிக்கப் படுகிறது.
அனைத்து தீயணைப்பு வீரர்களின் புரவலரான புனித ஃப்ளோரியனின் சிறப்பு தினத்துடனான தொடர்பிற்காக இந்தத் தேதியானது தேர்ந்தெடுக்கப் பட்டது.
1998 ஆம் ஆண்டு டிசம்பர் 02 ஆம் தேதியன்று, விக்டோரியாவின் லிண்டன் நகரில் ஏற்பட்ட கடுமையான காட்டுத் தீயை அணைக்கப் போராடிய ஐந்து தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.