ஜெர்மனி நாட்டின் ஹனோவரில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் வீராங்கனைகளான ஹீனா சிந்து தங்கப் பதக்கமும், P. ஸ்ரீ நிவேதா வெண்கலப் பதக்கத்தையும் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் வென்றுள்ளனர். இப்போட்டியானது அடுத்த வாரம் நடைபெற உள்ள ISSF (International Shooting Sport Federation) முனிச் உலகக் கோப்பைப் போட்டிகளுக்கு முன்பாக நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.