உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிசம்பர் 15-ஆம் தேதி சர்வதேச தேயிலை தினம் கொண்டாடப்படுகிறது.
தேயிலை உற்பத்தியாளர்கள், தேயிலை தோட்டப் பணியாளர்கள் போன்றோரின் மீது உலக தேயிலை வர்த்தகம் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி குடிமக்களிடமும் அரசிடமும் உலகளாவிய கவனத்தை ஏற்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகின்றது.‘
2004 மற்றும் 2005ல் முறையே இந்தியாவின் மும்பை மற்றும் பிரேசிலின் போர்டோ அலெக்ரி போன்ற இடங்களில் நடைபெற்ற உலக சமூக மன்றத்தில் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வர்த்தக சங்கங்களுக்கிடையேயான பேச்சு வார்த்தையை தொடர்ந்து 2005-ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 15-ஆம் தேதி சர்வதேச தேயிலை தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.