ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 15 அன்று சர்வதேச தேயிலை தினம் அனுசரிக்கப்படுகிறது.
தேயிலை உற்பத்தி நாடுகளில் உள்ள பணியாளர்கள் மற்றும் விவசாயிகளின் மீது சர்வதேச தேயிலை வணிகம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அரசாங்கம் மற்றும் குடிமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இத்தினம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
இது 2005 ஆம் ஆண்டு முதல் வங்கதேசம், இலங்கை, நேபாளம், வியட்னாம், இந்தோனேசியா, கென்யா, மலாவி, மலேசியா, உகாண்டா, இந்தியா மற்றும் டான்சானியா ஆகிய தேயிலை உற்பத்தி நாடுகளில் அனுசரிக்கப் படுகின்றது
2005 ஆம் ஆண்டு புது தில்லியில் முதலாவது தேயிலை தினம் அனுசரிக்கப்பட்டது.