அன்னை தெரசாவின் நினைவாக இந்த சர்வதேச தினம் கொண்டாடப் படுகிறது.
பல தொண்டு நடவடிக்கைகளில் பங்கேற்பதன் பெரு முக்கியத்துவம் குறித்து தனி நபர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொண்டு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக மக்களை ஒன்றிணைப்பதற்கும் சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரின் நலனுக்காகப் பங்களிப்பதற்கும் இது ஒரு மதிப்பு மிக்க வாய்ப்பாகச் செயல்படுகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற புகழ்பெற்ற அன்னை தெரசா அவர்கள் 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் தேதியன்று காலமானார்.