சர்வதேச நறுமணப் பொருள் மாநாட்டின் நான்காவது பதிப்பு தெலுங்கானாவின் தலைநகரமும் முத்து நகரமுமான ஹைதராபாத்தில் நடத்தப்பட்டது.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் நறுமணப் பொருட்களில் 80 சதவிகிதத்திற்கு மேல் ஏற்றுமதி செய்யும் அகில இந்திய நறுமணப் பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் மன்றத்தால் இம்மாநாடு நடத்தப்படுகின்றது.
இம்மாநாடு அனைத்து நறுமணப் பொருட்கள் சங்கம், அனைத்து வியாபார மையங்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள், நறுமணப் பொருட்களை பயன்படுத்துவோர் மற்றும் விவசாயிகள் ஆகிய அனைவருக்கும் அவர்கள் கலந்துரையாடுவதற்கும் தொடர்பு கொள்வதற்கும் உகந்த ஒரு தளமாக கருதப்படுகின்றது.
2019 ஆம் மாநாட்டிற்கான கருத்துரு “மாற்றங்களின் சவால்கள், மதிப்புச் சங்கிலியை மறுவரையறை செய்தல்” என்பதாகும்.
“மாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்புகள் மூலமாக தடைகளை சமாளித்தல்” எனும் கருத்துருவுடன் இம்மாநாட்டின் மூன்றாவது பதிப்பு ஜெய்ப்பூரில் நடத்தப்பட்டது.