TNPSC Thervupettagam

சர்வதேச நவ்ரூஸ் தினம் - மார்ச் 21

March 28 , 2024 242 days 274 0
  • நோரூஸ் அல்லது நவ்ரூஸ் என்றும் உச்சரிக்கப் படுகின்ற நெளரஸ் என்பது ஈரானிய புத்தாண்டு ஆகும். இது வடக்கு அரைக்கோளத்தில் வசந்தகால சம இரவு-பகல் காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
  • ஜோராஸ்ட்ரியனிசத்தில் (பார்சி இனம்) தோற்ற வேர்களைக் கொண்ட ஒரு பண்டைய திருவிழாவான நவ்ரூஸ் ஈரானிய சூரிய ஹிஜ்ரி நாட்காட்டியின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
  • இது பொதுவாக மார்ச் 19 மற்றும் மார்ச் 21 ஆகிய தேதிகளுக்கு இடையில், வசந்த கால சம இரவு-பகல் நாளன்று அல்லது அதை நெருங்கிய பிற தேதிகளில் வரும்.
  • இந்த ஆண்டு, ஈரானின் தெஹ்ரானில் காலை 6:36 மணிக்கு இளவேனிற் கால சம இரவு-பகல் நிகழ்வு நிகழ்ந்ததையடுத்து மார்ச் 20 ஆம் தேதியன்று இந்தத் தினம் கொண்டாடப் பட்டது.
  • இருப்பினும், ஐக்கிய நாடுகள் சபையானது அதன் உலகளாவிய அனுசரிப்பு மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை வலியுறுத்தி மார்ச் 21 ஆம் தேதியை சர்வதேச நவ்ரூஸ் தினமாக அங்கீகரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்