சர்வதேச ஆற்றல் நிறுவனத்தின் ஆய்வுகள் மற்றும் 2019 ஆம் ஆண்டின் பிபி புள்ளியியல் ஆய்வின்படி, உலகின் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தி மற்றும் நுகர்வோராக ஆசியப் பிராந்தியம் விளங்குகின்றது. இது உலக அளவில் 75 சதவிகிதம் நிலக்கரிப் பயன்பாட்டைக் கொண்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய நிலக்கரி நுகர்வோராக சீனா விளங்குகின்றது. இதற்கு அடுத்து இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் நிலக்கரியை அதிக அளவில் நுகர்கின்றன.