சர்வதேச நீதிக்கான உலக தினம் என்பது ஜூலை 17 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகின்ற ஒரு சர்வதேச தினமாகும். இது சர்வதேசக் குற்றவியல் நீதி தினம் அல்லது சர்வதேச நீதி தினம் என்று அழைக்கப்படுகின்றது.
இத்தினம் சர்வதேசக் குற்றவியல் நீதியை ஊக்குவிப்பதையும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC - International Criminal Court) பணியை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு ஜுன் 01 அன்று கம்பாலாவில் (உகாண்டா) நடைபெற்ற ரோம் ஒப்பந்தத்தின் மறு ஆய்வுக் கருத்தரங்கில் உறுப்பு நாடுகளின் சபையானது ஜூலை 17 ஆம் தேதியை சர்வதேசக் குற்றவியல் நீதி தினமாகக் கொண்டாட முடிவு செய்தது.