TNPSC Thervupettagam

சர்வதேச நீதிக்கான உலக தினம் - ஜூலை 17

July 19 , 2024 128 days 237 0
  • இந்த நாள் ஆனது சர்வதேசக் குற்றவியல் நீதியை ஊக்குவிப்பதற்காகவும், சர்வதேசச் சமூகத்தைப் பாதிக்கும் மிகவும் கடுமையான குற்றங்களுக்காக குற்றவாளிகளுக்குத் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதற்கு எதிரான பெரும் போராட்டத்தைக் கௌரவிப்பதற்காகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • 1998 ஆம் ஆண்டில் இந்த நாளில் தான் ரோம் சாசனம் என்பது ஏற்றுக் கொள்ளப் பட்டு  சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) நிறுவப்பட்டது.
  • இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்புக் குற்றங்களில் ஈடுபட்ட தனிநபர்கள் மீதான குற்ற விசாரணையினை மேற்கொள்ளும் முதல் நிரந்தர சர்வதேச நீதிமன்றம் ICC ஆகும்.
  • சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை (ICC) நிறுவுவதற்கான சட்ட அடித்தளம் ஆனது 2002 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
  • சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமையகம் ஆனது, நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ளது.
  • இது ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாடின்றி சுதந்திரமாக இயங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்