சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தெற்காசிய பிராந்திய மையம் உ.பி.யின் வாரணாசியில் அமைய இருக்கிறது
August 4 , 2017 2715 days 1138 0
வாரணாசியில் உள்ள தேசிய விதை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய வளாகத்தில் இந்நிறுவனம் அமைக்கப்படுவதற்கான அனுமதியினை மத்திய அமைச்சரவைக் குழு வழங்கியிருக்கிறது.
இப்பரிந்துரையின் கீழ் வாரணாசியில் நெல்லுக்கு மதிப்பு கூட்டுச் செய்யும் உயராய்வு மையம் ஏற்படுத்தப்பட உள்ளது.
இந்நிறுவனத்தில் தானியங்களில் உள்ள கன உலோகங்களின் தரத்தினை அறியக்கூடிய வகையிலான சோதனைக் கூடம் நவீன முறையில் ஏற்படுத்தப்பட இருக்கிறது.
கிழக்கிந்தியாவில் அமையப்பட இருக்கிற முதல் சர்வதேச மையம் இதுவே ஆகும். இப்பிராந்தியத்தில் நெல் உற்பத்தியினை மேம்படுத்துவதற்கு இந்நிறுவனம் மிகவும் உறுதுணையாக விளங்கும்.