இந்த நாள் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளின் நினைவு கூரும் விதமாக, அவரது வாழ்க்கை மற்றும் மரபினைப் போற்றும் வகையில் கொண்டாடப் படுகிறது.
தனிநபர்கள் சமூக சேவை மற்றும் சமூகப் போராட்டச் செயல்களில் ஈடுபடுவதற்கான உலகளாவிய அழைப்பாக இந்தத் தினம் செயல்படுவதால் இது மகத்தான அளவில் ஒரு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
1994 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதியன்று, தென்னாப்பிரிக்காவில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபராக அவர் பதவியேற்றார்.
மண்டேலா அவர்கள் தென்னாப்பிரிக்காவில் “தேசத்தின் தந்தை” என்று குறிப்பிடப் படுகிறார்.
1993 ஆம் ஆண்டில் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
“The Legacy Lives on Through You: Climate, Food, and Solidarity” என்பது இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துருவாகும்.