- உலகளாவிய கொள்கை வகுக்கும் முயற்சியான சர்வதேச நைட்ரஜன் துவக்க முயற்சியின் (INI - International Nitrogen Initiative) தலைவராக முதன் முறையாக இந்திய-ஆசியப் பகுதியைச் சேர்ந்த இந்திய அறிவியலாளர் கல்வியாளர் ரகுராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- இவர் இங்கிலாந்தைச் சேர்ந்த சூழலியல் மற்றும் நீரியல் மையத்தைச் சேர்ந்த மார்க் சட்டன் என்பவர்க்கு அடுத்ததாக பதவியேற்றுள்ளார்.
- இது தவிர இவருடன் நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் கட்னர் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்புது தலைவர்கள் ஜனவரி 1, 2019லிருந்து முறைப்படி செயல்படத் துவங்குவர்.
- INI-ன் பிராந்திய இயக்குனரின் கீழ் செயல்படும் ஆறு பிராந்திய மையங்களின் அமைப்புகளை (கிழக்காசியா, தெற்காசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, வடஅமெரிக்கா) வழி நடத்துவதே இவர்களின் பொறுப்பாகும்.
சர்வதேச நைட்ரஜன் முன்முயற்சி (INI)
- INI ஆனது 2003ல் சுற்றுச்சூழல் சிக்கல்களின் அறிவியல் குழு (Scope) மற்றும் சர்வதேச புவியீர்ப்பு - உயிர்க்கோள திட்ட (IGBP - International Geosphere-Biosphere Program) ஆதரவின் கீழ் அமைக்கப்பட்ட சர்வதேச திட்டமாகும்.
- INI ஆனது ஆறு பிராந்திய மைய இயக்குனர்களைத் தலைமையாகக் கொண்ட வழி நடத்தும் குழுவால் ஒருங்கிணைக்கப்படுகிறது.
- மேலும் INI ஆனது தற்போது சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான எதிர்கால புவி என்ற நிறுவனத்தின் (future earth) நீடித்த பங்குதாரர் ஆகும்.