TNPSC Thervupettagam

சர்வதேச நோய்க்கிருமி கண்காணிப்பு வலையமைப்பு

May 26 , 2023 550 days 249 0
  • உலக சுகாதார அமைப்பானது இந்த உலகளாவிய அளவிலான வலையமைப்பினை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • கோவிட்-19 போன்ற தொற்று நோய்களின் அச்சுறுத்தலை விரைவாகக் கண்டறிந்து, அவற்றின் பரவலைத் தடுக்கும் வகையில் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சர்வதேச நோய்க் கிருமிக் கண்காணிப்பு வலையமைப்பு (IPSN) ஆனது, மாதிரிகளைச் சேகரித்துப் பகுப்பாய்வு செய்வதற்கான அமைப்புகளை மேம்படுத்துவதில் நாடுகள் மற்றும் பல்வேறு பிராந்தியங்களை இணைப்பதற்கான ஒரு தளத்தினை வழங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • இந்த வலையமைப்பானது வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் இன்ன பிற நோயினை உண்டாக்கும் உயிரினங்களின் மரபணுக் குறியீடுகளைப் பகுப்பாய்வு செய்வதற்கு நோய்க் கிருமிகளின் மரபியலைச் சார்ந்திருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்