TNPSC Thervupettagam

சர்வதேச பனிச்சிறுத்தை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்றக் கூட்டமைப்பு - பிஷ்கெக், கிர்கிஸ்தான்

September 10 , 2017 2621 days 928 0
  • சர்வதேச பனிச்சிறுத்தை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்றக் கூட்டமைப்பு கிர்கிஸ்தானில் உள்ள பிஷ்கெக் நகரில் நடைபெற்றது.
  • இக்கூட்டமைப்பின் நோக்கமானது, 2020ஆம் ஆண்டிற்குள் 20 பனிச்சிறுத்தை வாழும் இடங்களை பாதுகாப்பதாகும்.
  • பனிச்சிறுத்தையானது, IUCN சிவப்பு தரவு பட்டியலில் (Red Data List) ‘ஆபத்தான’ (Endangered) பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், CITES முதலாம் தொகுப்பில் (Appendix-I) சேர்கப்பட்டுள்ளது. இதனால் பனிச்சிறுத்தையின் உடல் பாகங்கள் சர்வதேச சந்தையில் வியாபாரம் செய்ய தடைசெய்யப்பட்டுள்ளது.
  • பனிச்சிறுத்தை, ஆப்கானிஸ்தான், பூடான், சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மங்கோலியா, நேபாளம், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 12 நாடுகளில் வாழிடம் கொண்டுள்ளது.
  • தஜிகிஸ்தானை தவிர மற்ற நாடுகள் அனைத்தும் CITES (Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்