கழுவேலி பறவைகள் சரணாலயத்திற்கு அருகிலுள்ள அகரம் காப்புக் காடுகள் வனப் பகுதியில் ஓர் அதிநவீனமான சர்வதேசப் பறவைகள் மையத்தினை நிறுவுவதற்கான திட்டத்தில் விழுப்புரம் வனப் பிரிவு செயல்பட்டு வருகிறது.
முன்மொழியப்பட்ட சர்வதேச பறவைகள் மையத்தில் விழிப்புணர்வு மற்றும் செயல் விளக்க மையம் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளுடன் கூடிய ஆராய்ச்சி மற்றும் கல்வி மையங்கள் இடம் பெற்றிருக்கும்.
கழுவேலி ஏரியானது உப்புக்கள்ளி கடற்கழி (நீரோடை) மற்றும் எடையன்திட்டு கழி முகம் மூலம் வங்காள விரிகுடாவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மத்திய ஆசிய வலசைப் போக்கு வழத்தடத்தில் செல்லும் வலசை போகும் பறவைகள் இங்கு கூடு கட்டுவதற்காக வருகை தருகின்றன.
இந்த ராம்சர் தளம் ஆனது தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய உவர் நீர் ஈரநிலமாகும்.