சர்வதேச புத்த கூட்டமைப்பின் (International Buddhist Confederation) புதிய பொதுச் செயலாளராக திரிபுராவைச் சேர்ந்த புத்த மத துறவியான தம்மபியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச புத்தமதக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக இவர் இரண்டாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவிலும், உலகின் பிற பகுதிகளிலும் அமைந்த புத்த மத பாரம்பரிய சின்னங்களையும், பாரம்பரிய இடங்களையும் பாதுகாப்பதற்காகவும், மேம்படுத்துவதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட உலகளாவிய புத்த மத மன்றமே சர்வதேச புத்தமத கூட்டமைப்பாகும்.