2000 ஆம் ஆண்டு டிசம்பர் 04 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்த நாளை நியமித்தது.
1990 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நல உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கையினை ஏற்றுக் கொண்டதை இந்த தேதி நினைவு கூருகிறது.
2020 ஆம் ஆண்டில், 281 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சர்வதேச அளவில் புலம் பெயர்ந்தோர் ஆவர்.
2021 ஆம் ஆண்டின் இறுதியில், 59 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உள்நாட்டில் இடம் பெயர்ந்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “பாதுகாப்பானப் புலம்பெயர்வை ஊக்குவித்தல்” என்பதாகும்.